/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாவட்ட ஜூடோ போட்டி 150 மாணவியர் பங்கேற்பு
/
மாவட்ட ஜூடோ போட்டி 150 மாணவியர் பங்கேற்பு
ADDED : ஆக 20, 2025 01:53 AM
நாமக்கல், நாமக்கல் மாவட்ட அளவில், பள்ளி மாணவியருக்கான புதிய விளையாட்டு போட்டிகளில் ஒன்றான, ஜூடோ போட்டி, நாமக்கல் தெற்கு அரசு மேல் நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. போட்டியில், 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவியர் மற்றும் 25 கிலோ எடை பிரிவுகள் என, நான்கு பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. அதில், மாவட்டம் முழுவதும் இருந்து, 150க்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்றனர்.
தலைமையாசிரியர் சீனிவாசராகவன் தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியர் உமா மாதேஸ்வரி முன்னிலை வகித்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் காந்திமதி போட்டியை துவக்கி வைத்தார். வயது மற்றும் எடை பிரிவுகளில் முதலிடம் பிடித்த மாணவியர் மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, உடற்கல்வி ஆசிரியர்கள் சரவணன், அன்புசெழியன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.