sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாவட்ட அளவில் யோகாசன போட்டி பள்ளி மாணவர் 1,500 பேர் பங்கேற்பு

/

மாவட்ட அளவில் யோகாசன போட்டி பள்ளி மாணவர் 1,500 பேர் பங்கேற்பு

மாவட்ட அளவில் யோகாசன போட்டி பள்ளி மாணவர் 1,500 பேர் பங்கேற்பு

மாவட்ட அளவில் யோகாசன போட்டி பள்ளி மாணவர் 1,500 பேர் பங்கேற்பு


ADDED : நவ 09, 2025 03:28 AM

Google News

ADDED : நவ 09, 2025 03:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: மாவட்ட அளவிலான யோகாசன போட்டியில், அரசு, தனியார் பள்ளி மாணவ, மாணவியர், 1,500க்கும் மேற்பட்டோர் பங்-கேற்று, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

உடலும், மனமும் ஆரோக்கியமாக இருப்பதற்கு, நம் முன்-னோர்கள் நமக்கு அளித்த கொடை தான் யோக பயிற்சி. நம் நாட்டில் தோன்றிய யோகாசனங்களை, உலகம் முழுவதும் ஏரா-ளமானோர் பின்பற்றுகின்றனர்.

ஆண்டுதோறும், ஜூன், 21ல், 'உலக யோகா' தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும், அவ்-வப்போது பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியரிடையே யோகா-சன போட்டிகளை பல்வேறு அமைப்புகள் நடத்தி வருகின்றனர்.தமிழ்நாடு தொழில் முறை தகுதி பதிவுபெற்ற யோகா ஆசிரியர் நலச்சங்கம், மாவட்ட கிளை சார்பில், பள்ளிகளுக்கு இடையே, மாவட்ட அளவிலான யோகாசன போட்டி, நாமக்கல்லில் நேற்று நடந்தது. நாமக்கல் மாவட்டத்திலிருந்து, பொது மற்றும் சிறப்பு பிரிவில், 5 முதல், 17 வயது வரை உள்ள மாணவ, மாணவியர், 1,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, யோகாசனங்களை செய்து காண்பித்து, தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

இதில், கால பைரவர் ஆசனம், அகர்ண தனுராசனம், சலபாசனம், கண்ட பின்டாசனம் அஞ்சலி ஆசனம் போன்ற பல்வேறு ஆச-னங்கள் செய்யப்பட்டன.

சிறந்த முறையில் யோகாசன பயிற்சிகளை செய்த மாணவ, - மாணவியருக்கு கோப்பைகள், பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us