/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
/
நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
ADDED : நவ 09, 2025 03:28 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை ஒன்றியம், கார்கூடல்பட்டி அரசு மேல்நிலைப்-பள்ளியில், நேற்று நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடந்தது. முகாமில், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் இதர ரத்த பரிசோதனை, மின் இதய வரைபடம், எக்கோ, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்ஸ்ரே, காச நோய் மற்றும் தொழுநோய் கண்டறியும் பரிசோதனை, ஆரம்பகட்ட புற்றுநோய் கண்டறியும் பரிசோ-தனை செய்யப்பட்டது.
மேலும், சிறப்பு பொது நல மருத்துவம், பொது நல அறுவை சிகிச்சை மருத்துவம், எலும்பு முறிவு மருத்துவம், மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், தோல் சிகிச்சை, கண், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், மனநலம், கதிர்வீச்சு மருத்-துவம், நுரையீரல் மருத்துவம், சர்க்கரை நோய் மருத்துவம், இயன்முறை மருத்துவம், இருதயநோய் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், பல் மருத்துவம், இந்திய பாரம்பரிய மருத்துவம் ஆகிய, 17 துறைகளை சேர்ந்த நிபுணர்களின் மருத்துவ ஆலோச-னைகளும் வழங்கப்பட்டன.முகாமை, எம்.பி., ராஜேஸ்குமார், அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நாமகிரிப்பேட்டை அட்மா குழு தலைவர் ராமசாமி, நாமக்கல் மருத்துவ கல்லுாரி மருத்துவ-மனை முதல்வர் சாந்தா அருள்மொழி, மாவட்ட நல அலுவலர் பூங்கொடி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

