/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பூத் ஏஜன்ட்களுக்கு பா.ஜ., பயிலரங்கம்
/
பூத் ஏஜன்ட்களுக்கு பா.ஜ., பயிலரங்கம்
ADDED : நவ 09, 2025 03:29 AM
ராசிபுரம்: ராசிபுரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, பா.ஜ., பி.எல்.ஏ.,-2 ஏஜன்ட்களுக்கான பயிலரங்கம், நேற்று தனியார் மண்டபத்தில் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர்கள் சேதுராமன், தமிழரசு, மாவட்ட பொதுச்செயலாளர் முத்துக்குமார், நகர தலைவர் வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், வாக்காளர் பட்டியலில் எஸ்.ஐ.ஆர்., திருத்தம் குறித்து விளக்கமளித்தனர்.தேர்தல் அலுவலர்கள் பணி, பூத் ஏஜன்ட்கள், வாக்காளர்களை சேர்ப்பது, நீக்குவதில்உள்ள பங்களிப்பு குறித்து விரிவாக கூறினர்.
மேலும், தேர்தல் வெற்றிக்கு வாக்காளர் பட்டியல் எவ்வளவு முக்-கியமானது என்பது குறித்தும், குறிப்பிட்ட தேதிக்குள் படிவங்-களை வாக்காளர்களிடம் இருந்து அதிகாரிகளிடம் வழங்க வேண்டிய அவசியம் குறித்தும் விளக்கினர். மேலும், பூத் ஏஜன்ட்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு பதிலளித்தனர்.
வாக்காளர் பட்டியலில் எவ்வாறு போலி வாக்காளர்கள் சேர்க்கப்-படுகின்றனர் என்பது குறித்தும் விளக்கினர். பா.ஜ., மாநில நிர்-வாகி லோகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

