ADDED : நவ 09, 2025 03:29 AM
ராசிபுரம்: நாமக்கல் மாவட்டத்தில், 1,629 ஓட்டுச்சாவடி நிலை அலுவ-லர்கள் உள்ளனர். ஒவ்வொரு ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்-களின் மேற்பார்வையாளர்களுக்கு, 10 வாக்குச்சாவடிகள் வீதம் மொத்தம், 165 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
டிச., 4 வரை வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வினியோகம் மற்றும் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது.நாமக்கல், சேந்தமங்கலம், பரமத்திவேலூர், ராசிபுரம் ஆகிய சட்-டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடந்து வரும் வாக்-காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவம் வினியோகம் செய்யும் பணியின் முன்னேற்றம் குறித்து, அனைத்து ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களின் கண்காணிப்பா-ளர்களுடன் கலெக்டர் துர்கா மூர்த்தி, நேற்று ஆய்வு மேற்-கொண்டார்.
ஆய்வின்போது, ஆர்.டி.ஓ., சாந்தி, தனித்துணை ஆட்சியர் சுந்தரராஜன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

