/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டிரினிடி இன்டர்நேஷனல் பள்ளியில் 15ம் ஆண்டு விழா
/
டிரினிடி இன்டர்நேஷனல் பள்ளியில் 15ம் ஆண்டு விழா
ADDED : ஜன 13, 2025 02:54 AM
நாமக்கல்: நாமக்கல், மோகனுார் சாலை, டிரினிடி நகரில், 'டிரினிடி இன்டர்-நேஷனல்' பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியின், 15-ம் ஆண்டு விழா, கடந்த, 10ல் பள்ளி தலைவர் பழனிசாமி, செயலாளர் ராம-ஸ்ரீனிவாசன் தலைமையில் நடந்தது. பள்ளி முதல்வர் ஆனந்-தசாம் ஆண்டறிக்கை வாசித்தார்.
சதர்ன் டிரான்ஸ்போர்ட் தயாளன், விழாவை துவக்கி வைத்து பேசினார். சிறப்பு விருந்தினராக, பட்டிமன்ற பேச்சாளர் சாந்தா-மணி கலந்துகொண்டார். விழாவிற்கு, டிரினிடி கல்வி நிறுவ-னங்களின் இயக்குனர்கள் குழந்தைவேல், சந்திரசேகரன், செல்-வராஜ், அருணா செல்வராஜ், பள்ளி வளாக ஒருங்கிணைப்பாளர் பிரசாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, மாணவ, மாணவியரின் கண்கவர் கலை நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர். மாணவ, மாணவியர், பெற்-றோருக்கு பரிசளிப்பு விழா நடந்தது.பெற்றோர், ஆசிரியர், ஆசிரியைகள் கலந்துகொண்டனர். பிரை-மரி பள்ளி பொறுப்பாளர் பிரியதர்ஷினி நன்றி தெரிவித்தார்.