/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'புதுமைப்பெண்' திட்டத்தில் மாவட்டத்தில் 1,689 பேர் பயன்
/
'புதுமைப்பெண்' திட்டத்தில் மாவட்டத்தில் 1,689 பேர் பயன்
'புதுமைப்பெண்' திட்டத்தில் மாவட்டத்தில் 1,689 பேர் பயன்
'புதுமைப்பெண்' திட்டத்தில் மாவட்டத்தில் 1,689 பேர் பயன்
ADDED : டிச 31, 2024 07:27 AM
நாமக்கல்: தமிழக முதல்வர் ஸ்டாலின், துாத்துக்குடி மாவட்டம், காமராஜ் கல்லுாரியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், அரசு உதவி பெறும் பள்ளிகளில், 6 முதல் பிளஸ் 2 வரை, தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவியர்களுக்கு, மாதந்தோறும், 1,000 ரூபாய் வழங்கும் 'புதுமைப் பெண்' திட்டத்தை விரிவாக்கம் செய்து தொடங்கி வைத்தார்.
அதை தொடர்ந்து, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.பி., மாதேஸ்வரன், எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்று, தமிழ் வழியில் பயின்ற, 110 கல்லுாரிகளை சேர்ந்த, 1,689 மாணவியர்களுக்கு, 'புதுமைப்பெண்' திட்டத்தின் கீழ், மாதம், 1,000 ரூபாய் பெறுவதற்கான பற்று அட்டைகளை வழங்கி பேசுகையில், ''புதுமைப் பெண் திட்டத்தை விரிவாக்கம் செய்வதன் மூலம், தமிழகத்தில், 4.80 லட்சம் மாணவியர் பயன் பெறுவர். நாமக்கல் மாவட்டத்தில், 1,689 மாணவியர்களும், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரியில் மட்டும், 147 மாணவியர் இத்திட்டத்தின் பயன்பெற உள்ளனர்,'' என்றார்.
தொடர்ந்து, எம்.பி., ராஜேஸ்குமார் பேசியதாவது: திருவள்ளுவர் புகழ் நிலைத்தால் தமிழ் மொழி, தமிழ் இனம் மற்றும் தமிழர்களின் புகழ் ஓங்கும். நாமக்கல் கலெக்டரின் சீரிய முயற்சியால், மாவட்டத்தில் பெண் குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, குழந்தை திருமணம் சதவீதம் குறைந்து வருகிறது. பெண்கள் கல்வி கற்றால் தான் நாடு முன்னேறும். பெண்கள் அரசின் திட்டங்களை பயன்படுத்தி நன்கு கல்வி கற்று, தாங்கள் பயின்ற பள்ளிக்கும், கல்லுாரிக்கும், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.