ADDED : மே 11, 2025 02:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மல்லசமுத்திரம்:நாமக்கல் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் நேற்று முன்தினம் காலை, 5:30 மணிக்கு, மல்லசமுத்திரம் அருகே, பள்ளக்குழி பால் சொசைட்டி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சென்ற, 'டாடா சுமோ' காரை சோதனை செய்ததில், 1,750 கிலோ ரேஷன் அரிசி இருப்பதை கண்டுபிடித்தனர்.
விசாரணையில், காரை ஓட்டி வந்தவர், சேலத்தை சேர்ந்த ஜெகதீசன், 45.
இவர், கன்னங்குறிச்சியில் ரேஷன் அரிசியை வாங்கி, மல்லசமுத்திரத்தில் உள்ள வீரமணி வாயிலாக நாமக்கல் மாவட்டத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்வதும் தெரியவந்தது.
இதையடுத்து, 1,750 கிலோ ரேஷன் அரிசி, காரை போலீசார், பறிமுதல் செய்து ஜெகதீசனை சிறையில் அடைத்தனர். வீரமணியை தேடி வருகின்றனர்.