/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ப.வேலுார் அருகே மது விற்ற 2 பேர் கைது
/
ப.வேலுார் அருகே மது விற்ற 2 பேர் கைது
ADDED : அக் 09, 2025 12:48 AM
ப.வேலுார் :ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆறுமுகம், 46; கூலித்தொழிலாளி. இவர், ப.வேலுார்-மோகனுார் ரோட்டில் உள்ள காமாட்சி நகர், டாஸ்மாக் மதுபான கடை அருகே, மது பாட்டில்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அப்பகுதிக்கு சென்ற போலீசார், ஆறுமுகத்திடம் விசாரித்தபோது, சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது உறுதியானது. 29 மது பாட்டில்களை பறிமுதல் செய்த ப.வேலுார் போலீசார், அவரை கைது செய்தனர்.
காளப்பநாயக்கன்பட்டி அடுத்து திருமலைப்பட்டி பகுதியில், புதுச்சத்திரம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கள்ளத்தனமாக மது விற்ற பாஸ்கரன், 56, என்பவரை கைது செய்தனர். மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
* ப.வேலுார் அருகே, தென்னந்தோப்பில் பணம் வைத்து சூதாடுவதாக, ப.வேலுார் டி.எஸ்.பி., சங்கீதாவிற்கு தகவல் கிடைத்தது. ப.வேலுார் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் போலீசார் விரைந்து சென்றனர்.
அங்கு, பணம் வைத்து சீட்டாடிய, மோகனுார் தியாகராஜ், 52, நாமக்கல் சின்ராஜ், 34, காட்டுப்புத்துார் சசிகுமார் 50, ப.வேலுார் ஆண்டி, 25, சசிகுமார், 45, வரதராஜன், 30, பொத்தனுார் பிரகாஷ் 35, ஆகிய, ஏழு பேரையும் கைது செய்து, 20,000 ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.