/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டாஸ்மாக் குடோன் தொழிலாளர் போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம்
/
டாஸ்மாக் குடோன் தொழிலாளர் போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம்
டாஸ்மாக் குடோன் தொழிலாளர் போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம்
டாஸ்மாக் குடோன் தொழிலாளர் போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 08, 2025 01:23 AM
நாமக்கல், நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் செயல்படும், டாஸ்மாக் குடோன் முன், தமிழ்நாடு டாஸ்மாக் குடோன் தொழிலாளர்கள் மாநில ஒருங்கிணைப்பு குழு மற்றும் நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், குடோன் சங்க தலைவர் பெருமாள் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் வேலுசாமி, கோரிக்கைகள் குறித்து பேசினார்.
அதில், டாஸ்மார்க் குடோன் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு, சட்டப்படியான ஆண்டு போனஸ் தீபாவளி பண்டிகைக்கு, 10 நாளுக்கு முன்பே வழங்க வேண்டும். ஸ்கேனிங் செய்யும் வேலைக்கு கூலி வழங்க வேண்டும். பெட்டிக்கு, 3.50 ரூபாய் என, ஒரே மாதிரி ஏற்றுக்கூலி வழங்க வேண்டும். எச்.எல்., என்ற பெயரில் சுமைப்பணி தொழிலாளர்களின் கூலியில், மாதாமாதம் பணம் கட்டச்சொல்வதை தடுத்து நிறுத்த வேண்டும்.
குடோன்களில் அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.