ADDED : ஜூலை 17, 2026 06:29 AM
அ நிறம் | அளவு
ப.வேலுார்:எஸ்.ஐ.,லோகேஷ்
தலைமையில் போலீசார், காவிரி ஆற்று படுகையில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் மூட்டையில் மணல் கொண்டு சென்ற இரண்டு
நபர்களை போலீசார் பிடித்தனர். விசாரணையில் சங்கர், 47, செல்வராஜ்,
36, என்பது தெரியவந்தது. இருவரும் மணலை திருடி, ஜேடர்பாளையம்
பகுதியில் விற்றது தெரிய வந்தது. ஜேடர்பாளையம் போலீசார் இருவரையும்
கைது செய்தனர்.
