/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எஸ்.எஸ்.ஐ., வீட்டில் 25 பவுன் நகை பணம் திருடிய வழக்கில் 2 பேர் கைது
/
எஸ்.எஸ்.ஐ., வீட்டில் 25 பவுன் நகை பணம் திருடிய வழக்கில் 2 பேர் கைது
எஸ்.எஸ்.ஐ., வீட்டில் 25 பவுன் நகை பணம் திருடிய வழக்கில் 2 பேர் கைது
எஸ்.எஸ்.ஐ., வீட்டில் 25 பவுன் நகை பணம் திருடிய வழக்கில் 2 பேர் கைது
ADDED : டிச 20, 2024 01:30 AM
நாமக்கல், டிச. 20-
நாமக்கல் எஸ்.எஸ்.ஐ., வீட்டில், 25 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிய இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
நாமக்கல்-திருச்சி சாலை, இந்திரா நகரைச் சேர்ந்த முருகவேல், 52. இவர் நாமக்கல் மாவட்ட குற்றப்பதிவேடு பிரிவு அலுவலகத்தில் எஸ்.எஸ்.ஐ.,யாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அமுதவள்ளி, அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர்கள் இருவரும், கடந்த செப்.,19 ம் தேதி காலை வீட்டை பூட்டி விட்டு பணிக்கு சென்று விட்டனர். மாலை அமுதவள்ளி வீட்டிற்கு திரும்பியபோது, முன்பக்க கதவு மற்றும் படுக்கை அறையின் கதவு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த, 25 பவுன் தங்க, வெள்ளி நகைகள் மற்றும் 45 ஆயிரம் ரூபாய் திருட்டுப் போயிருப்பது தெரியவந்தது.
இது குறித்து அவர் தன் கணவருக்கும், நாமக்கல் நகர போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். ஏ.எஸ்.பி., ஆகாஷ் ஜோஷி, இன்ஸ்பெக்டர் கபிலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். இரண்டு மாதங்களாக பல்வேறு இடங்களில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த திருமால், 38, திருச்சி மாவட்டம் நல்லுாரைச் சேர்ந்த சாந்தகுமார், 24, ஆகியோர் நகை, பணத்தை திருடியது தெரியவந்தது. வாணியம்பாடியில் பதுங்கியிருந்த திருமாலையும், தஞ்சாவூரில் பதுங்கியிருந்த சாந்தகுமாரையும் போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து, 24 பவுன் நகையை பறிமுதல்
செய்தனர். இருவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.