/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில் விரைவில் 2 ஏ.டி.எம்., மையம்
/
நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில் விரைவில் 2 ஏ.டி.எம்., மையம்
நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில் விரைவில் 2 ஏ.டி.எம்., மையம்
நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில் விரைவில் 2 ஏ.டி.எம்., மையம்
ADDED : டிச 01, 2024 01:33 AM
நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில்
விரைவில் 2 ஏ.டி.எம்., மையம்
நாமக்கல், டிச. 1-
நாமக்கல் மாநகராட்சி, முதலைப்பட்டியில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு பஸ் ஸ்டாண்டில், மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனருமான ஆசியா மரியம் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, 'புதிய பஸ் ஸ்டாண்ட் கடைகளில் உணவு பொருட்களை தரமாகவும், சுகாதாரமாகவும் தயாரிக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், துணிப்பைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்' என, வியாபாரிகளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, 'பஸ் ஸ்டாண்டை துாய்மையாக பராமரிக்கவும், பொதுமக்களுக்கு சிரமமின்றி குறிப்பிட்ட இடைவெளியில் பஸ்கள் இயக்க வேண்டும்' என, அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், 'பஸ் ஸ்டாண்டில், இரண்டு புதிய ஏ.டி.எம்., மையங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்' என, கூறினார்.
மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி, அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் செங்கோட்டுவேலன், ஆர்.டி.ஓ., முருகன், துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

