/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தோட்டத்து வீட்டில் 2 ஆடுகள் திருட்டு
/
தோட்டத்து வீட்டில் 2 ஆடுகள் திருட்டு
ADDED : மே 17, 2025 01:23 AM
வெண்ணந்துார் :வெண்ணந்துார் அருகே, அக்கரைப்பட்டி அடுத்த பொரசல்பட்டி அலிஞ்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் ஜம்புகேஸ்வரன், 70; இவரது மனைவி கனகம், 65; இவர்களுக்கு, ஐந்து ஏக்கர் விவசாய தோட்டம் உள்ளது. அங்குள்ள கொட்டகையில், பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். ஆடுகளை பாதுகாக்க, இரண்டு நாய்களை வளர்த்து வந்தார். கடந்த ஏப்., -20ல் மர்ம நபர்கள் உணவில் விஷம் வைத்து, இரண்டு நாய்களை கொன்றுவிட்டனர்.
இந்நிலையில், கொட்டகையில், நேற்று முன்தினம் வழக்கம்போல் ஆடுகளை கட்டி வைத்திருந்தார். பின், நேற்று அதிகாலை வந்து பார்த்தபோது, இரண்டு ஆடுகளை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து புகார்படி, வெண்ணந்துார் போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த, இரண்டு ஆண்டுகளுக்கு முன், இவரது தோட்டத்தில் வளர்த்து வந்த, 30 கோழிகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது குறிப்பிடத்தக்கது.