/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மோகனுாரில் ரூ.60.95 லட்சத்தில் 2 கிராம பஞ்., அலுவலகம் திறப்பு
/
மோகனுாரில் ரூ.60.95 லட்சத்தில் 2 கிராம பஞ்., அலுவலகம் திறப்பு
மோகனுாரில் ரூ.60.95 லட்சத்தில் 2 கிராம பஞ்., அலுவலகம் திறப்பு
மோகனுாரில் ரூ.60.95 லட்சத்தில் 2 கிராம பஞ்., அலுவலகம் திறப்பு
ADDED : டிச 16, 2024 03:18 AM
மோகனுார்: மோகனுார் தாலுகா, என்.புதுப்பட்டியில், 31.55 லட்சம் ரூபாய், நாமக்கல் ஒன்றியம், பெரியகவுண்டம்பாளையத்தில், 29.40 லட்சம் ரூபாய் என, மொத்தம், 60.95 லட்சம் ரூபாய் மதிப்பில், இரண்டு பஞ்., அலுவலக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா, என்.புதுப்பட்டியில் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், பொன்னு-சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.பி.,யும், மத்திய கூட்-டுறவு வங்கி தலைவருமான ராஜேஸ்குமார் பஞ்., அலுவலக கட்-டடத்தை திறந்து வைத்தார். மேலும், 9.80 லட்சம் ரூபாய் மதிப்பில், வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
அப்போது அவர் கூறியதாவது:
தமிழக முதல்வர் ஆட்சி பொறுப்பேற்ற பின், பல்வேறு அரசு அலுவலக கட்டடங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். அனைத்து பஞ்.,களிலும், பஞ்., செயலகம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளார். புதிய சாலைகள் அமைத்தல், சாலை மேம்பாட்டு பணிகள், குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்-படி, இப்பகுதியில், எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 13 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கப்பட்டுள்-ளது.இவ்வாறு அவர் பேசினார்.