/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
2 ஹெச்.எம்., இடமாற்றம்: பெற்றோர் சாலை மறியல்
/
2 ஹெச்.எம்., இடமாற்றம்: பெற்றோர் சாலை மறியல்
ADDED : டிச 19, 2024 07:20 AM
சேலம்: சேலம், கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்-பள்ளி தலைமை ஆசிரியை அமுதா, குழந்தைகள், பெற்றோர், பள்ளி மேலாண் குழுவினரிடம் கோபத்தை காட்டுகிறார் என புகார் எழுந்தது. அதேபோல் செட்டிச்சாவடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அந்தோணி, தனியார் இயக்க கூட்டங்களை பள்ளியில் நடத்துவதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து விசாரித்த, மாவட்ட கல்வி அலுவலர் மலர்-விழி(தொடக்க கல்வி), அமுதாவை செட்டிச்சாவடிக்கும், அந்தோ-ணியை கொண்டப்பநாயக்கன்பட்டிக்கும் இடமாற்றம் செய்தார். இதை கண்டித்து, செட்டிச்சாவடி பள்ளியை சேர்ந்த மாணவர்களின் பெற்றோர் சிலர், அப்பள்ளி முன் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை, போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பினர்.

