ADDED : நவ 04, 2024 04:39 AM
நாமகிரிப்பேட்டை,: நாமகிரிப்பேட்டை அடுத்த தண்ணீர்பந்தல்காட்டை சேர்ந்தவர் கந்தசாமி, 60; விவசாயி. இவரது வீட்டிற்கு முன் ஆடுகளை கட்டி வைத்திருந்தார்.
நேற்று அதிகாலை, ஆடுகள் சத்தம் போடுவதை கேட்டு எழுந்த கந்தசாமி, வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது, ஆடுகளை இரண்டு நபர்கள் துாக்கி செல்வதை பார்த்தார். இதுகுறித்து, நாம-கிரிப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கிருந்து ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அருகில் இருந்த ரோந்து போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று ஆடு திருடிய இருவரையும் பிடித்தனர்.
விசாரணையில் சீராப்பள்ளி காந்தி நகர் காலனியை சேர்ந்த ராஜா மகன் பாலகிருஷ்ணன், 41, மங்களபுரம், தாண்டாகவுண்டம்பா-ளையத்தை சேர்ந்த அருணாச்சலம் மகன் பவித்ரன், 29 என்பது தெரிந்தது. ஆடுகளை மீட்ட போலீசார், இருவரையும் கைது செய்தனர்.