/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
போக்குவரத்துக்கு இடையூறு 2 தனியார் பஸ்கள் பறிமுதல்
/
போக்குவரத்துக்கு இடையூறு 2 தனியார் பஸ்கள் பறிமுதல்
போக்குவரத்துக்கு இடையூறு 2 தனியார் பஸ்கள் பறிமுதல்
போக்குவரத்துக்கு இடையூறு 2 தனியார் பஸ்கள் பறிமுதல்
ADDED : டிச 13, 2025 05:55 AM
ப.வேலுார்: சாலையின் குறுக்கே பஸ்களை நிறுத்தி, பொது மக்களுக்கு இடையூறு செய்த, 2 தனியார் பஸ்களை ப.வேலுார் போலீசார் பறிமுதல் செய்தனர்.
ப.வேலுாரில் இருந்து ஈரோடு செல்லும், 2 தனியார் பஸ்கள், நேற்று மாலை, 5:30 மணிக்கு புறப்பட்டன. அப்போது, ஒரு பஸ்சில் டிரைவராக சசிகுமார், 31, கண்டக்டராக செந்தில்குமார், 42; மற்றொரு பஸ்சில் டிரைவராக அஜித்குமார், 27, கண்டக்ட-ராக சந்தோஷ், 25, ஆகியோர் பணியில் இருந்தனர். பஸ் புறப்ப-டும்போது, 'டைமிங்' பிரச்னையால், 2 பஸ் டிரைவர், கண்டக்-டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றியதால், பஸ் ஸ்டாண்ட் எதிரே செல்லும் சாலையில், குறுக்கும் நெடுக்குமாக பஸ்சை நிறுத்தினர். இதனால், பஸ் ஸ்டாண்டில் இருந்த பயணிகள், வாகன ஓட்டிகள், பஸ்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்து நின்றதால், கடும் போக்கு-வரத்து நெரிசல் ஏற்பட்டது.
ப.வேலுார் எஸ்.ஐ., தங்கவேல் தலைமையில் வந்த போலீசார், இடையூறாக நிறுத்தியிருந்த, 2 தனியார் பஸ்களையும் அப்புறப்ப-டுத்தி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். பின், இரண்டு தனியார் பஸ்களையும் பறிமுதல் செய்தனர்.
ப.வேலுார் பஸ் ஸ்டாண்டில் தினந்தோறும் இதுபோன்ற சம்ப-வங்கள் நடந்து வருவதால், காலை, மாலை நேரங்களில் பாதுகாப்-புக்கு போலீசாரை நியமிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

