/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குழந்தை தொழிலாளரை பணி அமர்த்தினால் 2 ஆண்டு சிறை: உதவி ஆணையர் எச்சரிக்கை
/
குழந்தை தொழிலாளரை பணி அமர்த்தினால் 2 ஆண்டு சிறை: உதவி ஆணையர் எச்சரிக்கை
குழந்தை தொழிலாளரை பணி அமர்த்தினால் 2 ஆண்டு சிறை: உதவி ஆணையர் எச்சரிக்கை
குழந்தை தொழிலாளரை பணி அமர்த்தினால் 2 ஆண்டு சிறை: உதவி ஆணையர் எச்சரிக்கை
ADDED : ஜூன் 12, 2025 01:52 AM
நாமக்கல், 'குழந்தை தொழிலாளரை பணியில் அமர்த்தினால், இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்' என, நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தை, இந்த ஆண்டுக்குள் குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக மாற்றுவதை தமிழக அரசு நோக்கமாக கொண்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜூன், 12ல், உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
சென்னை தொழிலாளர் ஆணையாளர் ராமன் அறிவுரைப்படி, அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில், குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்கள் யாரையும் பணி அமர்த்தக்கூடாது.
மேலும், உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமான, இன்று (ஜூன், 12), அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில், குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக உறுதிமொழியை ஏற்க வேண்டும்.
குழந்தைகளை, 18 வயது பூர்த்தியடையாமல் பணியில் ஈடுபடுத்தினாலோ அல்லது பணிபுரிய அனுமதித்தாலோ, நிறுவன உரிமையாளர் மீது, குழந்தை தொழிலாளரை பணியில் அமர்த்திய குற்றத்திற்காக, 20,000 முதல், 50,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். அல்லது, ஆறு மாதம் முதல், இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ அல்லது அபராதத்துடன் சிறை தண்டனையும் சேர்த்து விதிக்கப்படும்.
பொதுமக்கள் குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் பணிபுரிவது தொடர்பான புகார்களை, 1098 என்ற கட்டணம் இல்லா சைல்டு லைன் எண்ணில் தெரிவிக்கலாம். நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில், தொழிலாளர் உதவி ஆணையர் மற்றும் மாவட்ட தடுப்புக்குழு அலுவலர்களால் தொடர் ஆய்வுகள் நடத்தப்படும்.
கடைகள், நிறுவனங்கள், கோழிப்பண்ணைகள், செங்கல் சூளைகள், நுாற்பாலைகள், வணிக நிறுவனங்கள் உள்பட எந்த ஒரு நிறுவனமும், குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தினரை பணியில் ஈடுபடுத்தக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.