/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கோழி, ஆடு திருட வந்த 2 வாலிபர் சுற்றிவளைப்பு
/
கோழி, ஆடு திருட வந்த 2 வாலிபர் சுற்றிவளைப்பு
ADDED : செப் 04, 2025 02:16 AM
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை அருகே, ஆடு, கோழி திருட வந்த வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
நாமகிரிப்பேட்டை அடுத்த கட்டபுளியமரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் மகன் மதியழகன், 26; மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக பணியாளர். இவரது தோட்டத்தில் ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு புகுந்த மர்ம நபர்கள் ஆடு, கோழிகளை திருட முயன்றனர்.
ட்டும் திருடிக்கொண்டு தாங்கள் வந்த, 3 டூவீலர்களில் தப்ப முயன்றனர். அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நாமரிப்பேட்டை போலீசாரை பார்த்ததும் வந்த வழியே மீண்டும் திரும்பி வேகமாக சென்றனர். எதிரே வந்த மதியழகன் மற்றும் அக்கம் பக்கத்தினர் டூவீலரை தடுத்து நிறுத்த முயன்றனர். அதில் ஒரு வண்டியில் வந்த, இரண்டு பேரை பொதுமக்கள் பிடித்தனர். மற்றவர்கள் தப்பி ஓடினர். பின்னால் துரத்தி வந்த போலீசார், இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதில், சேலம் பகுதியை சேர்ந்த சங்கரன் மகன் விஷால், 19, காகாபாளையத்தை சேர்ந்த காளியப்பன் மகன் பிரகாஷ், 24, என்பது தெரியவந்தது. மேலும், இவர்களுடன் இன்னும், ஐந்து பேர் வந்ததும் தெரிந்தது. விஷால் மீது ஏற்கனவே கிச்சிபாளையத்தில், இரண்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.