/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
20 கி., பிளாஸ்டிக் பறிமுதல் ரூ.3,800 அபராதம் விதிப்பு
/
20 கி., பிளாஸ்டிக் பறிமுதல் ரூ.3,800 அபராதம் விதிப்பு
20 கி., பிளாஸ்டிக் பறிமுதல் ரூ.3,800 அபராதம் விதிப்பு
20 கி., பிளாஸ்டிக் பறிமுதல் ரூ.3,800 அபராதம் விதிப்பு
ADDED : நவ 10, 2024 01:30 AM
20 கி., பிளாஸ்டிக் பறிமுதல்
ரூ.3,800 அபராதம் விதிப்பு
ப.வேலுார், நவ. 10--
பாண்டமங்கலம் டவுன் பஞ்., பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் உள்ளன. இதில், ஹோட்டல்கள், துரித உணவு கடைகள், டீக்கடை, குளிர்பான கடை, மளிகை, பேக்கரி, உள்ளிட்ட கடைகள் அடங்கும். மேற்கண்ட கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பது மற்றும் பயன்படுத்துவதாக டவுன் பஞ்., நிர்வாகத்துக்கு புகார் வந்தது. பாண்டமங்கலம் டவுன் பஞ்., செயல் அலுவலர் கிருஷ்ணவேணி தலைமையில், டவுன் பஞ்., ஊழியர்கள் கடைகளில் ஆய்வு செய்தனர். இதில், மேற்கண்ட கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது மற்றும் விற்பது தெரியவந்தது. இதையடுத்து, 10 கடைகளுக்கு, 3,800 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், 20 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.