/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாவட்ட அளவிலான கலைத்திருவிழா 27 விடுதிகளை சேர்ந்த 200 மாணவர்கள் பங்கேற்பு
/
மாவட்ட அளவிலான கலைத்திருவிழா 27 விடுதிகளை சேர்ந்த 200 மாணவர்கள் பங்கேற்பு
மாவட்ட அளவிலான கலைத்திருவிழா 27 விடுதிகளை சேர்ந்த 200 மாணவர்கள் பங்கேற்பு
மாவட்ட அளவிலான கலைத்திருவிழா 27 விடுதிகளை சேர்ந்த 200 மாணவர்கள் பங்கேற்பு
ADDED : பிப் 16, 2025 03:24 AM
நாமக்கல்: பள்ளி, கல்லுாரி விடுதி மாணவ, மாணவியருக்கு நடந்த மாவட்ட அளவிலான கலைத்திருவிழாவில், 27 விடுதிகளை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
நாமக்கல் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில், பிற்படுத்-தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவி-லான கலைத்திருவிழா நேற்று நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்து போட்டியை துவக்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா, மாவட்ட பிற்படுத்தப்-பட்டோர் நல அலுவலர் கிருஷ்ணவேணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து, மாவட்டத்தில் செயல்படும், 27 விடுதிகளில் தங்கி படிக்கும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், 200க்கும் மேற்-பட்டோர் பங்கேற்றனர். மாவட்ட அளவில் பேச்சு போட்டி, பள்-ளிகளுக்கு, 'என்னை கவர்ந்த நுால்' என்ற தலைப்பிலும், கல்லுா-ரிகளுக்கு, 'இந்திய அரசியலமைப்பு சட்டம் - 75வது ஆண்டு' என்ற தலைப்பிலும் நடத்தப்பட்டது.மேலும், கட்டுரை போட்டிகள், 'பள்ளிகளுக்கு தமிழர் பண்-பாடு' என்ற தலைப்பிலும், கல்லுாரிகளுக்கு, 'பேரிடர் மேலாண்மை' என்ற தலைப்பிலும் நடத்தப்பட்டது. நீளம் தாண்-டுதல், 100 மீ., ஓட்டப்பந்தயம், பேச்சு மற்றும் கட்டுரை போட்-டிகளும் நடத்தப்பட்டது.
போட்டியானது, 6, 7, 8ம் வகுப்பு, 9, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 என, மூன்று பிரிவுகளாகவும், பள்ளி கல்லுாரி மாணவ, மாணவியருக்கு தனித்தனியாகவும் நடத்தப்பட்டது. அதில், முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டனர். 'வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, கேடயம், மெடல் மற்றும் சான்றிதழ் பின்னர் வழங்கப்படும்' என, அலுவலர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட மாணவியர் விளையாட்டு விடு-தியில் உள்ள, 33 கால்பந்து வீரர்கள், 25 கபடி வீரர்கள் என மொத்தம், 58 வீரர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வழங்கப்பட்டுள்ள, விளையாட்டு உடை-களை கலெக்டர் வழங்கினார்.
விடுதி காப்பாளர்கள் சங்க தலைவர் சுரேஷ், செயலாளர் ஜெக-தீஸ்வரன், பொருளாளர் கார்த்திக், விடுதி காப்பாளர்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.