sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கோவிலில் 216 கிடா பலியிட்டு 10,000 பேருக்கு அசைவ விருந்து

/

கோவிலில் 216 கிடா பலியிட்டு 10,000 பேருக்கு அசைவ விருந்து

கோவிலில் 216 கிடா பலியிட்டு 10,000 பேருக்கு அசைவ விருந்து

கோவிலில் 216 கிடா பலியிட்டு 10,000 பேருக்கு அசைவ விருந்து


ADDED : பிப் 17, 2025 03:24 AM

Google News

ADDED : பிப் 17, 2025 03:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்,: நாமக்கல் மாவட்டம் ப.வேலுார் அருகே, சேளூர் சாணார்பாளை-யத்தில், 56 அடி உயரம் கொண்ட பிரசித்தி பெற்ற திருப்பதி முனியப்ப சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம், கிடா வெட்டு பூஜை நடப்பது வழக்கம். நடப்-பாண்டு திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. பல்வேறு வாசனை திரவியங்களால் சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. அன்-றிரவு, பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய, 216 ஆட்டுக்கி-டாக்களை பலியிட்டு பூஜை செய்தனர்.

தொடர்ந்து நேற்று காலை, 9:00 மணிக்கு சமைக்கப்பட்ட அசைவ உணவை, சுவாமிக்கு படையலிட்டு தீபாராதனை காட்-டப்பட்டது. பின் பக்தர்களுக்கு அசைவ விருந்து வைக்கப்பட்-டது. இதில், 10,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இன்று காலை கோழிகள் பலியிட்டு மறு பூஜை நடக்கிறது. மதியம் மறு அபிஷேகம், தீபாராதனையுடன் விழா நிறைவடைகி-றது.






      Dinamalar
      Follow us