/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'சி விஜில்' கட்டணமில்லா தொலைபேசியில் 221 புகார்கள் அளிப்பு:209 மீது நடவடிக்கை

ADDED : ஏப் 19, 2024 06:46 AM
நாமக்கல் : லோக்சபா தேர்தல் குறித்து கடந்த மார்ச், 16ல், இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.
அன்று முதல், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. அதையடுத்து, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் வெளியிடப்பட்டது.மேலும், சி விஜில் என்ற இணையதளமும் அறிமுகம் செய்யப்பட்டது. இவற்றில் புகார் தெரிவித்தால், உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில், லோக்சபா தேர்தலை முன்னிட்டு, சி விஜில் மூலம், 147 புகார் வந்தது. அவற்றிற்கு முழுவதும் தீர்வு காணப்பட்டது. மேலும், கட்டணமில்லா தொலைபேசியில், 74 புகார்கள் வந்தன. அதில், 62 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 12 புகார் விசாரணையில் உள்ளன.நாமக்கல் மாவட்டத்தில், 'சி விஜில்' மற்றும் கட்டணமில்லா தொலைபேசியில் மொத்தம், 221 புகார்கள் வந்துள்ளன. அவற்றில், 209 புகார்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. மீதம், 12 புகார் நிலுவையில் உள்ளன.