/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாவட்டத்தில் ஒரே நாளில் 226.40 மி.மீ., மழை
/
மாவட்டத்தில் ஒரே நாளில் 226.40 மி.மீ., மழை
ADDED : அக் 16, 2024 12:53 AM
மாவட்டத்தில் ஒரே நாளில் 226.40 மி.மீ., மழை
நாமக்கல், அக். 16-
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்து, வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு அச்சாரமாக, தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில், உள் மாவட்டங்களில் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக, மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில், கடந்த, 5 முதல் மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக, மாவட்டத்தில் உள்ள கொண்டிசெட்டிப்பட்டி ஏரி, செருக்கலை ஏரி உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி உள்ளன. இது, விவசாயிகளையும், மக்களையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவு, மாவட்டத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. விடிய விடிய பெய்த கனமழை காரணமாக, தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. நாமக்கல் மாவட்டத்தில், நேற்று காலை, 6:00 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு பின்வருமாறு:
எருமப்பட்டி, 20, குமாரபாளையம், 6, மங்களபுரம், 4.60, மோகனுார், 22, நாமக்கல், 35, ப.வேலுார், 15, புதுச்சத்திரம், 18, ராசிபுரம், 14.50, சேந்தமங்கலம், 18, திருச்செங்கோடு, 24.30, கலெக்டர் அலுவலகம், 27, கொல்லிமலை, 22 என, மொத்தம், 226.40 மி.மீ., மழை பெய்துள்ளது.