/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சோமேஸ்வரர் கோவிலில் 22ம் ஆண்டு ருத்ராபிஷேக பூஜை
/
சோமேஸ்வரர் கோவிலில் 22ம் ஆண்டு ருத்ராபிஷேக பூஜை
ADDED : ஜூலை 22, 2025 01:48 AM
சேந்தமங்கலம், சேந்தமங்கலம் சவுந்திரவள்ளி அம்பாள் சமேத சோமேஸ்வரர் கோவிலில், 22ம் ஆண்டு ருத்ராபிஷேக விழா இரண்டு நாட்கள் நடந்தது. நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு, யாக வேள்வி, மஹா கணபதி பூஜையுடன் தொடங்கியது.
தொடர்ந்து, ஆடி கிருத்திகையொட்டி முருகனுக்கு, 108 சங்காபிஷேகம், கலச தீர்த்தம், அபிஷேகம், அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. மாலை, 4:00 மணியளவில் துர்கை அம்மன், பைரவர் சுவாமிக்கு கலச தீர்த்த அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சோமேஸ்வரருக்கு ருத்ர ஜபம், தீபாராதனை நடந்தது.
நேற்று காலை, 7:00 மணி முதல் ருத்ர ஹோமம் நடந்தது. மதியம், 12:00 மணிக்கு சோமேஸ்வரருக்கு கலச அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு குத்துவிளக்கு பூஜை மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.