/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
24ல் மேச்சேரி வட்டார கல்வி கடன் மேளா
/
24ல் மேச்சேரி வட்டார கல்வி கடன் மேளா
ADDED : செப் 20, 2024 03:20 AM
ஓமலுார்: ஓமலுார் வட்டார அளவில் கல்வி கடன் மேளா, கோட்டகவுண்-டம்பட்டியில் உள்ள பத்மவாணி கல்லுாரியில் நேற்று நடந்தது. அதில், 9 வங்கிகள், 70 மாணவ, மாணவியரிடம் மனுக்களை பெற்று அதற்கான பணியை தொடங்கினர். முகாமை கலெக்டர் பிருந்தாதேவி பார்வையிட்டார்.
இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில், 7,000 மாணவ, மாணவியருக்கு, 99 கோடி ரூபாய், கல்வி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்-ளது. காடையாம்பட்டி வட்டாரத்தில் நடந்த முகாமில், 212, மகு-டஞ்சாவடியில், 251 என, 463 மாணவர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும், 29 பேருக்கு உடனே, 95.70 லட்சம் ரூபாய் கல்விக்கடன் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. மீதி விண்-ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்-டுள்ளது. மேச்சேரி வட்டாரத்தில் உள்ள மாணவ, மாணவியர் பயன்பெற, வரும், 24ல் கைலாஷ் மகளிர் கல்லுாரியில் கல்வி கடன் மேளா நடக்க உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.