ADDED : நவ 09, 2025 03:37 AM
நாமக்கல்: மோகனுார், என்.புதுப்பட்டியை சேர்ந்தவர் பிரவீன்குமார் மனைவி லட்சுமி, 30. கடந்த, 6ல், நாமக்கல் பலப்பட்டறை மாரி-யம்மன் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். இரவு, சுவாமி தரிசனம் செய்த பின், சேலம் சாலையில் உள்ள ஒரு ஓட்-டலில் உணவு அருந்திவிட்டு, 'டி.வி.எஸ்., எக்சல்' மொபட்டில், வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தனர்.
நாமக்கல்-திருச்சி சாலை, நாகராஜபுரம் சென்றபோது, 'ஹெல்மெட்' அணிந்தபடி, பைக்கில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், திடீரென லட்சுமி கழுத்தில் அணிந்திருந்த, ஏழரை பவுன் தாலிக்கொடியை பறித்துள்ளனர். அதிர்ச்சியடைந்த லட்-சுமி, தாலிக்கொடியை இறுக பிடித்துக்கொண்டார். அதில், இரண்-டரை பவுன் தாலிக்கொடி, மர்ம நபரின் கையில் மாட்டிக்கொண்-டது. உடனே சத்தம் போட்டார். அதற்குள் மர்ம நபர்கள் மின்னல் வேகத்தில் தப்பி சென்று தலைமறைவாகினர். இதுகு-றித்து புகார்படி, நாமக்கல் போலீசார், மர்ம நபர்களை தேடி வரு-கின்றனர்.

