ADDED : நவ 09, 2025 03:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார்: ப.வேலுார் அருகே, பாண்டமங்கலத்தை சேர்ந்தவர் கணேசன், 62; கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு, ப.வேலுார் டவுன் பஞ்.,க்கு சொந்தமான குப்பைமேடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ப.வேலுாரில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற விநாயகா என்ற தனியார் பஸ், கணேசன் மீது மோதியதில் படுகாயமடைந்தார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ-மனையில் சேர்த்தனர். நேற்று கணேசன் உயிரிழந்தார். ப.வேலுார் போலீசார், தலைமறைவான பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.

