sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

2 கோடி வாக்காளரை எஸ்.ஐ.ஆர்., மூலம் நீக்க சதி நடக்கிறது: எம்.பி., ராஜேஸ்குமார்

/

2 கோடி வாக்காளரை எஸ்.ஐ.ஆர்., மூலம் நீக்க சதி நடக்கிறது: எம்.பி., ராஜேஸ்குமார்

2 கோடி வாக்காளரை எஸ்.ஐ.ஆர்., மூலம் நீக்க சதி நடக்கிறது: எம்.பி., ராஜேஸ்குமார்

2 கோடி வாக்காளரை எஸ்.ஐ.ஆர்., மூலம் நீக்க சதி நடக்கிறது: எம்.பி., ராஜேஸ்குமார்


ADDED : நவ 09, 2025 03:36 AM

Google News

ADDED : நவ 09, 2025 03:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: கிழக்கு மாவட்ட, தி.மு.க., செயற்குழு கூட்டம், நாமக்கல்லில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். அமைச்சர் மதிவேந்தன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் பார் இளங்கோவன், மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலா-ளரும், எம்.பி.,யுமான

ராஜேஸ்குமார் பங்கேற்று பேசியதாவது:வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தத்தை, நாம் முதலில் இருந்து எதிர்த்து வருகின்றோம். எஸ்.ஐ.ஆர்.,ஐ மேலோட்டமாக பார்க்கும்போது இறந்தவர்கள், இரட்டை பதிவு ஓட்டுகள், வெளியூர் சென்றவர்களை நீக்குவது போல் தான் தெரியும்.

ஆனால், தமிழகத்தில், தி.மு.க.,வின் நலத்திட்டங்களால் பயன்-பெற்றவர்கள், இரண்டு கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்குள், வேக வேக-மாக, ஒரு மாதத்திற்குள் வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்த படிவத்தை வழங்கி, பூர்த்தி செய்யவில்லை எனக்கூறி, பீஹார் மாநிலத்தை போல், தமிழகத்திலும் சதி செய்ய திட்டமிட்டுள்-ளனர். வாக்காளர்களை நீக்கி விட்டால், தி.மு.க.,வின் ஓட்டு வங்கி குறைந்து விடும் என்பது அவர்களின் நம்பிக்கை.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, தமிழகத்தில், எஸ்.ஐ.ஆர்., சீராய்வை, தேர்தல் ஆணையம் கைவிட கோரியும், மத்திய பா.ஜ., அரசின் கைப்பா-வையாக மாறி தமிழகத்தில், எஸ்.ஐ.ஆர்.,ஐ செயல்படுத்துவதை கண்டித்து, வரும், 11 காலை, 10:00 மணிக்கு, நாமக்கல்-மோ-கனுார் சாலை பி.எஸ்.என்.எல்., எதிரே நடக்கும் கண்டன ஆர்ப்-பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பது என்பது உள்பட பல்-வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us