/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
250வது பால் உற்பத்தியாளர் சங்கம் அரசபாளையத்தில் திறப்பு
/
250வது பால் உற்பத்தியாளர் சங்கம் அரசபாளையத்தில் திறப்பு
250வது பால் உற்பத்தியாளர் சங்கம் அரசபாளையத்தில் திறப்பு
250வது பால் உற்பத்தியாளர் சங்கம் அரசபாளையத்தில் திறப்பு
ADDED : ஜன 03, 2025 01:14 AM
ராசிபுரம், ஜன. 3-
ராசிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட அரசபாளையம் பகுதியில், 250-வது ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் திறப்பு விழா நடந்தது.
எம்.பி., ராஜேஸ்குமார், ரிப்பன் வெட்டி திறந்து வைத்ததுடன் பால் விற்பனையை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: அரசபாளையம் பால் உற்பத்தி சங்கத் தலைவர் ரங்கசாமி தனியாக பால் விற்பனை கூடம் வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். தற்போது பால் விற்பனை கூடம் தொடங்கிப்பட்டு விட்டது.  அரச பாளையம் கிராம மக்கள் பல ஆண்டுகளாக பஸ் வசதி இல்லாமல் இருப்பதாக தெரிவித்தனர். அவர்கள் பகுதிக்கும் விடியல் பயண பஸ் வசதி செய்து தரப்படும். இவ்வாறு பேசினார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் ஜெகநாதன், சிவக்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.