/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'பெஞ்சல்' புயலால் 3 ஏக்கர் வாழை சேதம்
/
'பெஞ்சல்' புயலால் 3 ஏக்கர் வாழை சேதம்
ADDED : டிச 02, 2024 02:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருமப்பட்டி: எருமப்பட்டி யூனியன், பவித்திரம் புதுார் அருகே கொல்லிமலை அடிவாரத்தில் தோட்டமுடையான்பட்டி உள்ளது. இங்குள்ள விவசாயிகள், பாக்கு, வாழை, தென்னை உள்ளிட்ட மரங்கள் நடவு செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு, இப்பகுதியில், 'பெஞ்சல்' புயல் காரண-மாக கடும் சூறாவளி காற்று வீசியது.
இதனால், கோம்பை அடிவாரத்தில் பாக்கு மரங்களுக்கு நடுவே ஊடு பயிராக, 3 ஏக்கரில் பயிரிட்டிருந்த வாழை மரங்கள், காற்றின் வேகம் காரணமாக சாய்ந்து வீணாகின.
இதனால், இப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.