/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
போதை ஊசி, மாத்திரை, கஞ்சா விற்ற 3 பேருக்கு 'குண்டாஸ்'
/
போதை ஊசி, மாத்திரை, கஞ்சா விற்ற 3 பேருக்கு 'குண்டாஸ்'
போதை ஊசி, மாத்திரை, கஞ்சா விற்ற 3 பேருக்கு 'குண்டாஸ்'
போதை ஊசி, மாத்திரை, கஞ்சா விற்ற 3 பேருக்கு 'குண்டாஸ்'
ADDED : செப் 14, 2025 04:49 AM
ப.வேலுார்:ப.வேலுார் பழைய பைபாஸ் சாலையில் போதை மாத்திரை, ஊசிகளை மர்ம நபர்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ப.வேலுார் டி.எஸ்.பி., சங்கீதா உத்தரவுப்படி, ப.வேலுார் எஸ்.ஐ., சீனிவாசன் மற்றும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, இரண்டு வாலிபர்கள் போதை மாத்திரை விற்பனை செய்து கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.அதில், ஓலப்பாளையத்தை சேர்ந்த ஜாபர்வுல்லா மகன் இலியாஸ், 26, பாலப்பட்டி அருகே, குமாரபாளையத்தை சேர்ந்த பத்மநாபன் மகன் பிரேம்குமார், 30, என்பது தெரியவந்தது.
அவர்கள் இருவரையும், கடந்த ஆக., 20ல் கைது செய்த போலீசார், டூவீலர், 17 போதை மாத்திரை, ஐந்து போதை ஊசி-களை பறிமுதல் செய்தனர்.
மேலும், மாத்திரைகளை விற்பனை செய்து வைத்திருந்த, 8,600 ரூபாயை பறிமுதல் செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்-தனர். இவர்கள் மீது கஞ்சா, போதை ஊசி, மாத்திரை உட்பட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவர்களின் தொடர் குற்றங்களை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி., விமலா பரிந்துரைப்படி, கலெக்டர் துர்காமூர்த்தி குண்டர் தடுப்பு சட்டத்தில் இருவரையும் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி, சேலம் மத்திய சிறையில் உள்ள இலியாஸ், பிரேம்-குமார் ஆகிய இருவரிடமும், குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்-கான உத்தரவு நகலை, ப.வேலுார் போலீசார் வழங்கினர்.
* இதேபோல், மதுரையை சேர்ந்த சிவபிரகாஷ், 24, நாமக்கல், முட்டாஞ்செட்டியை சேர்ந்த லோகேஷ், 23, ஆகிய இருவரும், 17.5 கிலோ கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்தனர். அவர்-களை கைது செய்த போலீசார், சேலம் மத்திய சிறையில் அடைத்-தனர். விசாரணையில், லோகேஷ், ஒடிசாவில் இருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி வந்து, பெற்றோர் அரவணைப்பில் இல்லாத இளைஞர்களை கஞ்சா போதைக்கு அடிமையாக்கி, மூளை சலவை செய்து, அவர்களை கஞ்சா விற்பனை செய்ய பயன்படுத்தி வருவது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, நாமக்கல் எஸ்.பி., விமலா, கூடுதல் எஸ்.பி., தனராசு ஆகியோர், கலெக்டருக்கு பரிந்துரைத்தனர். பரிந்துரையை ஏற்ற கலெக்டர் துர்காமூர்த்தி, லோகேஷை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதற்கான நகலை, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள லோகேஷிடம் மதுவிலக்கு போலீசார் ஒப்படைத்தனர்.