/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காவிரி ஆற்றில் மணல் திருடிய 3 பேர் கைது
/
காவிரி ஆற்றில் மணல் திருடிய 3 பேர் கைது
ADDED : டிச 15, 2024 03:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மோகனுார்: மோகனுார் அடுத்த மணப்பள்ளி காவிரி ஆற்றில் மணல் கடத்-துவதாக, மோகனுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை-யடுத்து, எஸ்.ஐ., இளையசூரியன் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ராமநாயக்கன்பாளையம் பகுதியில், 3 டூவீலர்களில் மணல் கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.தொடர்ந்து, மணல் கடத்திய, 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த கவியரசன், 23, பிரவின், 24, ஆனந்த், 22 என்பது தெரியவந்தது.
அவர்களை கைது செய்த போலீசார், 3 வாகனங்களையும், மணல் மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.