/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பணம் வைத்து சேவல் சூதாட்டம் 3 கார், 5 டூவீலர்கள் பறிமுதல்
/
பணம் வைத்து சேவல் சூதாட்டம் 3 கார், 5 டூவீலர்கள் பறிமுதல்
பணம் வைத்து சேவல் சூதாட்டம் 3 கார், 5 டூவீலர்கள் பறிமுதல்
பணம் வைத்து சேவல் சூதாட்டம் 3 கார், 5 டூவீலர்கள் பறிமுதல்
ADDED : நவ 21, 2025 03:01 AM
பள்ளிப்பாளையம்,சின்ன ஆனங்கூர் பகுதியில், பணம் வைத்து சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட, 6 பேரை வெப்படை போலீசார் கைது செய்துள்ளனர். 3 கார், 5 டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளைம் அருகே வெப்படை அடுத்த சின்ன ஆனங்கூர் பகுதியில், பணம் வைத்து சேவல் சண்டை சூதாட்டம் நடந்து வருவதாக, வெப்படை போலீசுக்கு நேற்று முன்தினம் மாலை தகவல் வந்தது. இதையடுத்து, வெப்படை போலீசார் சின்ன ஆனங்கூர் பகுதியில் கண்காணிப்பு புணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள ஒரு தோட்டத்தில் கும்பலாக பலர் பணம் வைத்து, சேவல் சண்டை சூதாட்டம் ஆடிக் கொண்டிருந்தனர்.
போலீசார் வருவதை பார்த்ததும் அவர்கள் தப்பி செல்ல முயன்றனர். இதில் தினேஷ், 27, ஜெய்கணேஷ், 37, ரகுமான், 25, சந்தோஷ், 26, பூபதிராஜா, 29, ஆகிய ஐந்து பேரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். மேலும் 5 டூவீலர்கள், 3 கார்களை பறிமுதல் செய்தனர்.
தப்பிச் சென்ற, ராமராஜ், முரளி, ஹரிதாஸ், சசி, மயில், பவித்திரன், சோமு, கவின், ஜனார்தனன், கிருஷ்ணகுமார், பூபதி, மதன் ஆகியோரை தேடி வருகின்றனர்.
பணம் வைத்து சேவல் சண்டை சூதாட்டம் ஆடிய கும்பல், பள்ளிப்பாளையம், ஈரோடு, பெருந்துறை, திருச்செங்கோடு பகுதிகளை சேர்ந்தவர்கள் என, போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

