/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் பட்டறையில் லாரி திருட்டால் அதிர்ச்சி
/
நாமக்கல் பட்டறையில் லாரி திருட்டால் அதிர்ச்சி
ADDED : நவ 21, 2025 03:01 AM
நாமக்கல், நாமக்கல் அருகே, பட்டறை அருகில் நிறுத்தி வைத்திருந்த லாரியை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
திருச்சி மாவட்டம், துறையூர் விசுவாம்பாள் சமுத்திரத்தை சேர்ந்தவர் அய்யம்பெருமாள் மகன் செந்தில்குமார், 45. இவர் பழுதடைந்த தனது லாரியை, நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள கணேஷ் என்பவரின் பட்டறையில் கடந்த, 12ம் தேதி ரிப்பேர் செய்ய விட்டு சென்றார். லாரிகள் அதிகம் இருந்ததால் பட்டறை அருகில், காலியாக இருந்த இடத்தில் செந்தில்குமார் லாரியை நிறுத்தியுள்ளார். மறுநாள் பார்த்த போது லாரியை காணவில்லை. இதையடுத்து பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. நாமக்கல் நல்லிபாளையம் போலீசார் லாரியை தேடி வருகின்றனர்.

