/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டவுன் பஞ்., வரி விதிப்பு கமிட்டியில் இருந்து 3 கவுன்சிலர்கள் ராஜினாமா
/
டவுன் பஞ்., வரி விதிப்பு கமிட்டியில் இருந்து 3 கவுன்சிலர்கள் ராஜினாமா
டவுன் பஞ்., வரி விதிப்பு கமிட்டியில் இருந்து 3 கவுன்சிலர்கள் ராஜினாமா
டவுன் பஞ்., வரி விதிப்பு கமிட்டியில் இருந்து 3 கவுன்சிலர்கள் ராஜினாமா
ADDED : அக் 20, 2024 04:16 AM
ப.வேலுார்: ப.வேலுார், டவுன் பஞ்சாயத்து வரி விதிப்பு கமிட்டியில் இருந்த, மூன்று கவுன்சிலர்கள் நேற்று ராஜினாமா செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில், 18 வார்டுகள் உள்ளன. தி.மு.க.,வை சேர்ந்த லட்சுமி தலைவரா-கவும், செயல் அலுவலராக சோமசுந்தரமும் உள்ளனர். நாமக்கல் மாவட்டத்திலேயே, அதிக வரி வசூல் வருமானம் கொண்ட டவுன் பஞ்சாயத்தாக ப.வேலுார் உள்ளது. வரிவிதிப்பு முறை-களை கண்காணிக்க, டவுன் பஞ்., தலைவர் லட்சுமி தலை-மையில், தி.மு.க.,வை சேர்ந்த கவுன்சிலர்கள் இந்திராணி, லாவண்யா மற்றும் பா.ம.க.,வை சேர்ந்த கவுன்சிலர் சுகந்தி ஆகியோர் கொண்ட வரிவிதிப்பு கமிட்டி குழு உள்ளது.வரி விதிப்பில், செயல் அலுவலர் மாற்றம் செய்யும்போது, இக்-குழுவின் ஒப்புதலோடுதான் வரி உயர்த்தவோ, குறைக்கவோ செய்ய வேண்டும். ஆனால், தற்போது செயல் அலுவலர் கமிட்டி ஒப்புதல் இல்லாமல், தன்னிச்சையாக சொத்து வரி மற்றும் புதி-தாக கட்டப்பட்ட வீடுகளுக்கு வரி விதிப்பதில், அதிகப்படியான கட்டணம் வசூலித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து, கமிட்டி குழு உறுப்பினர்கள் இந்திராணி, லாவண்யா, சுகந்தி ஆகியோர் வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரி-வித்து வந்தனர். தொடர்ந்து, செயல் அலுவலர் சோமசுந்தரம் தன்-னிச்சையாக செயல்படுவதை கண்டித்து, மூன்று கவுன்சிலர்களும் நேற்று ராஜினாமா கடிதத்தை டவுன் பஞ்., அலுவலகத்தில் வழங்கினர்.
இதையடுத்து அவர்கள் கூறியதாவது.
ப.வேலுார் டவுன் பஞ்., செயல் அலுவலராக சோமசுந்தரம் பொறுப்பேற்றது முதல், புதிதாக கட்டப்பட்ட வீடுகளுக்கு, வரி விதிப்பில், 10 மடங்கு உயர்த்தி உள்ளார். அதனால், புதிதாக கட்-டப்பட்ட வீடுகளுக்கு வரி விதிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்-டுள்ளது. இதுகுறித்து பஞ்., நிர்வாகத்திடம் பலமுறை கூறிய-போதும் பலன் இல்லை. வரி விதிப்பில் கமிட்டி உறுப்பினர்க-ளான எங்களை கேட்காமல், தன்னிச்சையாக வரி உயர்த்தி விதிப்-பதை கண்டித்து நாங்கள் மூன்று பேரும் ராஜினாமா செய்-துள்ளோம். பஸ் ஸ்டாண்டில் பஸ்களுக்கு சுங்கவரி கட்டணம், வாரச்சந்தை கட்டண வசூல், கோழி வார சந்தை கட்டண வசூல் ஆகியவைகளை முறையாக ஏலம் விடாமல், டவுன் பஞ்சாயத்து துாய்மை பணியாளர்களை கொண்டு வரி வசூல் செய்கின்றனர். இவ்வாறு கூறினர்.
இதுகுறித்து செயல் அலுவலர் சோமசுந்தரம் கூறுகையில்,'' பேரூராட்சி தலைவர் லட்சுமி, வரி விதிப்பு கமிட்டியின் தலைவ-ராக உள்ளார். டவுன் பஞ்., செயல் அலுவலரான நானும் வரிவி-திப்பு கமிட்டியின் உறுப்பினர் தான். மேற்கொண்டு வரி விதிப்பு கமிட்டி குழு தீர்மானித்து, அரசுக்கு அறிக்கை அளித்து, அரசு ஆணைப்படி முடிவுகள் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.