/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் 100 இடங்களில் 3 நாள் துணை முதல்வர் பிறந்தநாள் கொண்டாட்டம்
/
நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் 100 இடங்களில் 3 நாள் துணை முதல்வர் பிறந்தநாள் கொண்டாட்டம்
நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் 100 இடங்களில் 3 நாள் துணை முதல்வர் பிறந்தநாள் கொண்டாட்டம்
நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் 100 இடங்களில் 3 நாள் துணை முதல்வர் பிறந்தநாள் கொண்டாட்டம்
ADDED : நவ 27, 2024 12:54 AM
நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் 100 இடங்களில்
3 நாள் துணை முதல்வர் பிறந்தநாள் கொண்டாட்டம்
நாமக்கல், நவ. 27---
நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான, எம்.பி., ராஜேஸ்குமார் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாள் விழா, இன்று முதல், 29 வரை, 3 நாள், 100 இடங்களில் கொண்டாடப்பட உள்ளது.
அதன்படி, இன்று, நாமக்கல் கிழக்கு நகர தி.மு.க., சார்பில், துணை மேயர் பூபதி தலைமையில், 3, 12, 13வது வார்டுகளில், துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட உள்ளது.
நாமக்கல் மேற்கு நகர செயலாளர் சிவகுமார் தலைமையில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். தெற்கு நகர செயலாளர் ராணா ஆனந்த் தலைமையில், 26, 35வது வார்டுகளிலும், லத்துவாடியிலும், ராசிபுரத்தில் நகர செயலாளர் சங்கர் தலைமையில் கொண்டாடப்படும். நாமக்கல் பஞ்., யூனியனில், ஒன்றிய செயலாளர் பழனிவேல், மோகனுாரில், ஒன்றிய செயலாளர் நவலடி, புதுச்சத்திரம் வடக்கில், ஒன்றிய செயலாளர் கவுதம், சேந்தமங்கலத்தில், ஒன்றிய செயலாளர் அசோக்குமார், எருமப்பட்டியில், ஒன்றிய செயலாளர் பாலசுப்ரமணியம் ஆகியோர் தலைமையில், 27ல் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட உள்ளது.
வரும், 28ல், எருமப்பட்டி ஒன்றிய செயலாளர் பாலசுப்ரமணியம் தலைமையில், வடுகப்பட்டி, காவக்காரப்பட்டி, வரகூர், பவித்திரம் ஆகிய இடங்களிலும்; கொல்லிமலையில், ஒன்றிய செயலாளர் செந்தில்முருகன், ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில், ஒன்றிய செயலாளர் ஜெகநாதன் தலைமையில், 27, 28 ஆகிய, 2 நாட்கள் பிறந்த நாள் விழா கொண்டாடப்படும்.
வெண்ணந்துாரில், ஒன்றிய செயலாளர் துரைசாமி, நாமகிரிப்பேட்டையில், ஒன்றிய செயலாளர் ராமசுவாமி தலைமையில், 27, 28 ஆகிய, 2 நாட்கள்; சீராப்பள்ளி டவுன் பஞ்.,ல், டவுன் பஞ்., துணைத்தலைவர் செல்வராஜ், நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்.,ல், டவுன் பஞ்., துணைத்தலைவர் அன்பழகன் தலைமையில், 27, 28, 29 ஆகிய, 3 நாட்கள் பிறந்த நாள் கொண்டாடப்படும்.
புதுப்பட்டி டவுன் பஞ்.,ல், தி.மு.க., செயலாளர் ஜெயகுமார் தலைமையில், 27, 28, 29 ஆகிய, 3 நாட்கள்; பட்டணம் டவுன் பஞ்.,ல், தி.மு.க., செயலாளர் நல்லதம்பி தலைமையிலும், பிள்ளாநல்லுார் டவுன் பஞ்.,ல், டவுன் பஞ்., தலைவர் சுப்ரமணியம் தலைமையிலும், இன்று, பிறந்தநாள் விழா கொண்டாடப்படும். சேந்தமங்கலம் டவுன் பஞ்.,ல், தி.மு.க., செயலாளர் தனபால் தலைமையில், 29ல் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.