/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கறவை மாடுகளை மடி நோயிலிருந்து காக்க 3 நாள் இலவச பயிற்சி முகாம்
/
கறவை மாடுகளை மடி நோயிலிருந்து காக்க 3 நாள் இலவச பயிற்சி முகாம்
கறவை மாடுகளை மடி நோயிலிருந்து காக்க 3 நாள் இலவச பயிற்சி முகாம்
கறவை மாடுகளை மடி நோயிலிருந்து காக்க 3 நாள் இலவச பயிற்சி முகாம்
ADDED : ஜூலை 27, 2025 12:46 AM
நாமக்கல், 'கறவை மாடுகளை மடி நோயிலிருந்து காப்பது எப்படி என்பது குறித்த இலவச பயிற்சி, நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரியில், மூன்று நாள் நடக்கிறது' என, நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரியில், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் நிதியுதவியுடன், மாடுகளை மடி நோயிலிருந்து பாதுகாப்பது எப்படி என்ற பயிற்சி வரும் ஆக., 6, 7, 8 ஆகிய, மூன்று நாட்கள் நடக்க உள்ளது. கறவை மாடுகள் வளர்க்கும் பெண்களுக்காக இப்பயிற்சி நடக்கிறது.
பயிற்சியில் பங்கு பெற விரும்புவோர், கால்நடை மருத்துவ சிகிச்சை துறையின் துறை தலைவரை, 94432-52942 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்புகொண்டு, முன்பதிவு செய்து கொள்ளலாம். முதலில் பதிவு செய்யும், 30 பேர் மட்டுமே பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். முன்பதிவு செய்ய கடைசி நாள் வரும், 31.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.