ADDED : ஜூன் 26, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம், -சேந்தமங்கலம் அடுத்த காமராஜபுரத்தை சேர்ந்தவர்கள் அண்ணாதுரை, 50, தங்கராஜ், 62; ஜங்களாபுரம் மேற்கு தெருவை சேர்ந்தவர் யாசின், 40; இவர்கள் மூவரும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையறிந்த சேந்தமங்கலம் போலீசார், மூவரையும் கைது செய்து, லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.