/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புகையிலை பொருட்களை கடத்தி வந்த 3 பேர் கைது
/
புகையிலை பொருட்களை கடத்தி வந்த 3 பேர் கைது
ADDED : அக் 17, 2025 01:36 AM
புதுச்சத்திம், புதுச்சத்திரம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காரில் கடத்தி வந்த, 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இன்ஸ்பெக்டர் கோமதி தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் புதுச்சத்திரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இண்டிகா காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், கூலீப்
உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பது தெரிந்தது. மொத்தம், 36 மூட்டைகளில் பாக்கெட்டுகளாக பேக் செய்து விற்பதற்காக எடுத்து வந்தது தெரிந்தது.
இதையடுத்து போதை பொருட்களை கொண்டு வந்த திருச்செங்கோடு, ஆண்டிபாளையம் தேவராசு, 44, கண்ணுார்பட்டியை சேர்ந்த விஜயகுமார், 36, சிங்களாந்தபுரம் அண்ணா நகரை சேர்ந்த செல்வகுமார், 43 ஆகியோரை போலீசார் கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர்.