/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஒடிசா வாலிபர்கள் 2 பேர் கொலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 3 பேர் கைது
/
ஒடிசா வாலிபர்கள் 2 பேர் கொலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 3 பேர் கைது
ஒடிசா வாலிபர்கள் 2 பேர் கொலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 3 பேர் கைது
ஒடிசா வாலிபர்கள் 2 பேர் கொலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 3 பேர் கைது
ADDED : டிச 19, 2024 07:13 AM
பள்ளிப்பாளையம்: வெப்படை அடுத்த பாதரை யில், தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்த ஒடிசா வாலிபர்கள் இருவர் கொலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த, 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஒடிசாவை சேர்ந்தவர்கள் முன்னா, 28, துபலேஷ், 27; இவர்கள், நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே, வெப்படையில் உள்ள தனியார் நுாற்பாலையில், கடந்த, இரண்டு மாதமாக வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம், வெப்படை அடுத்த பாதரையில், தலையில் கல்லை போட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். குற்றவாளிகளை பிடிக்க, 6 தனிப்படை அமைத்து, 50க்கு மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், கொலை செய்யப்பட்ட முன்னா, துபலேஷ் ஆகியோரின் நண்பர்களான ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ராஜன் லகுரி, 23, மான்சிங் காக் ராய், 20, தஸ்ரத் பேடிங், 21, ஆகிய, 3 பேரை கைது செய்தனர். இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: கைதான, 3 பேரும் பள்ளிப்-பாளையத்தில் உள்ள மற்றொரு நுாற்பாலையில் வேலை செய்து வந்தனர். இவர்கள் ஐந்து பேரும், பாதரையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தும்போது நண்பர்களாகி உள்ளனர். இதுபோல், நேற்று முன்தினம் டாஸ்மாக்கில் மது அருந்தியுள்-ளனர். அப்போது, இவர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்னையில், முன்னா, துபலேஷ் ஆகிய இருவரையும் கீழே தள்ளி, ராஜன் லகுரி, மான்சிங் காக்ராய், தஸ்ரத் பேடிங் ஆகிய, 3 பேரும் சேர்ந்து, தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

