/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெள்ளத்தில் சிக்கிய 3 நாய்க்குட்டிகள் மீட்பு
/
வெள்ளத்தில் சிக்கிய 3 நாய்க்குட்டிகள் மீட்பு
ADDED : அக் 28, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்கோடு, பாலக்கோடு அடுத்த சிங்காரத்தனஹள்ளி ஆற்றின் கரையோர மரத்தின் அடியிலுள்ள மண் திட்டில் நாய் ஒன்று, கடந்த, 4 நாட்களுக்கு முன், குட்டிகளை ஈன்றது. பஞ்சப்பள்ளி அணையில் இருந்து திறந்த நீரால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் தாய் நாய், தன் குட்டிகளை மண் குகைக்குள் அழைத்துச் சென்றது. கடந்த, 4 நாட்களாக உணவின்றியும், அங்கிருந்து வெளியேற்ற முடியாமலும் தவித்தது. இதனால் தாய் நாய் அபய குரல் எழுப்பியது. இதை சிலர் பார்த்து நாய்குட்டிகளை காப்பாற்ற முயன்று முடியாததால், பாலக்கோடு தீயணைப்பு துறை வீரர்கள் வந்து, 3 குட்டிகளுடன் தாய் நாயையும் மீட்டனர்.

