/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஓசூர் வார்டுகளில் சிறப்பு கூட்டம்
/
ஓசூர் வார்டுகளில் சிறப்பு கூட்டம்
ADDED : அக் 28, 2025 01:38 AM
ஓசூர், ஓசூர் மாநகராட்சியில் உள்ள, 45 வார்டுகளில் பொதுமக்களின் சேவைகளை மேம்படுத்தும் வகையில், வார்டுதோறும் சிறப்பு கூட்டங்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நேற்று, 22 வார்டுகளில், அந்தந்த பகுதி கவுன்சிலர்கள் தலைமையில் சிறப்பு கூட்டம் நடந்தது. குறிப்பாக, 23வது வார்டுக்கு உட்பட்ட பழைய ஏ.எஸ்.சி.டி., ஹட்கோ சிறுவர் பூங்காவில், அந்த வார்டு கவுன்சிலரும், மேயருமான சத்யா தலைமையில் கூட்டம் நடந்தது.
அதேபோல், 37வது வார்டில், மாநகராட்சி வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா மற்றும் 40வது வார்டில் கணக்கு குழு தலைவர் பார்வதி நாகராஜ் ஆகியோர் தலைமையில் கூட்டம் நடந்தது.இதில், குடிநீர், திடக்கழிவு மேலாண்மை, மழைநீர் வடிகால், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்படுத்தி தரக்கோரி, மக்கள் தரப்பில் மனுக்கள் வழங்கப்பட்டன. அவற்றை, அந்தந்த கூட்டத்தில் பங்கேற்ற மாநகராட்சி அதிகாரிகள் பெற்றுக்கொண்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இன்று (அக்.28) விடுபட்ட, 23 வார்டுகளுக்கு கூட்டம் நடக்க உள்ளது.

