/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தொழிலாளியிடம் பணம் பறிப்பு மோகனுாரில் 3 பேருக்கு 'காப்பு'
/
தொழிலாளியிடம் பணம் பறிப்பு மோகனுாரில் 3 பேருக்கு 'காப்பு'
தொழிலாளியிடம் பணம் பறிப்பு மோகனுாரில் 3 பேருக்கு 'காப்பு'
தொழிலாளியிடம் பணம் பறிப்பு மோகனுாரில் 3 பேருக்கு 'காப்பு'
ADDED : மே 05, 2025 03:01 AM
மோகனுார்: மோகனுார் டவுன் பஞ்.,க்குட்பட்ட, சின்ன அக்ரஹாரத்தை சேர்ந்-தவர் பழனியப்பன், 55; கூலித்தொழிலாளி. இவர், மோகனுார் உழவர் சந்தை அருகே, நேற்று முன்தினம் இரவு, துாங்கிக்கொண்-டிருந்ததார். அப்போது, 'குடி'போதையில் வந்த, மூன்று மர்ம நபர்கள், பழனியப்பன் சட்டை பாக்கெட்டில் இருந்து, 500 ரூபாயை பறித்தனர்.
இதை தட்டிக்கேட்ட பழனியப்பனை, மர்ம நபர்கள் சேர்ந்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து, பழனி-யப்பன் அளித்த புகார்படி, மோகனுார் போலீசார் மர்ம நபர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை, 8:00 மணிக்கு, மோகனுார் - வாங்கல் பிரிவு சாலையில், போலீசார் வாகன சோதனையில் ஈடு-பட்டிருந்தனர்.
அப்போது, சந்தேகப்படும்படி நின்றிருந்த நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில-ளித்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், மோகனுார், ராசி-பாளையம் காட்டுபிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த விஜய், 27, தோட்டக்கார தெருவை சேர்ந்த சசிகுமார், 31, சுண்ணாம்பு-காரர் தெருவை சேர்ந்த ஸ்ரீரங்கன் மகன் தமிழரசன், 22, என்பது தெரியவந்தது.
மேலும், பழனியப்பனை மிரட்டி பணம் பறித்து சென்றதை, மூவரும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து போலீசார் அவர்கள் மூவரையும் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்-தனர்.

