/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
30க்குள் சொத்து வரி செலுத்திரூ.5,000 தள்ளுபடி பெற அழைப்பு
/
30க்குள் சொத்து வரி செலுத்திரூ.5,000 தள்ளுபடி பெற அழைப்பு
30க்குள் சொத்து வரி செலுத்திரூ.5,000 தள்ளுபடி பெற அழைப்பு
30க்குள் சொத்து வரி செலுத்திரூ.5,000 தள்ளுபடி பெற அழைப்பு
ADDED : ஏப் 06, 2025 01:07 AM
30க்குள் சொத்து வரி செலுத்திரூ.5,000 தள்ளுபடி பெற அழைப்பு
நாமக்கல்: மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை, வரும், 30க்குள் செலுத்தி, 5 சதவீதம் முதல், அதிகபட்சம், 5,000 ரூபாய் வரை தள்ளுபடி பெற, நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும், 2025-26ம் நிதியாண்டில், முதலாம் அரையாண்டிற்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்களை, வரும், 30க்குள்ளும், இரண்டாம் அரையாண்டிற்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்களை, வரும், அக்., 31க்கும் முன்பும் செலுத்தும் பட்சத்தில், அபராதங்களை தவிர்த்து, அரசு வழங்கும் தள்ளுபடியான சொத்துவரி விகிதாசாரத்தில், 5 சதவீதம் முதல், அதிகபட்டசம், 5,000 ரூபாய் வரை பெற்று பயன் பெறலாம். மேற்குறிப்பிட்ட காலங்களில், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்களை செலுத்தி, தங்களது முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.