/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சக்தி கணபதி கோவிலில் 32 வது ஆண்டு விழா பூஜை
/
சக்தி கணபதி கோவிலில் 32 வது ஆண்டு விழா பூஜை
ADDED : பிப் 06, 2025 05:56 AM
நாமக்கல்: நாமக்கல் ஏ.எஸ்.பேட்டையில் சக்தி கணபதி கோவில் அமைந்துள்ளது. அக்கோவிலில் நேற்று 32 வது ஆண்டு விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.
அதையொட்டி, நேற்று காலை, 8:30 மணிக்கு மோகனுார் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். 9:00 மணிக்கு மஹா கணபதி ேஹாமம், 10:00 மணிக்கு 108 சங்குபூஜை ேஹாமம், 10:30க்கு சக்தி கணபதிக்கு மஹா அபிேஷகம் நடந்தது. 11:30 மணிக்கு 108 வலம்புரி சங்கு அபிேஷகமும், மஹா தீபாரதனையும் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.