/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
34 உழவர் நல சேவை மையங்கள் அமைப்பு ; விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல்
/
34 உழவர் நல சேவை மையங்கள் அமைப்பு ; விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல்
34 உழவர் நல சேவை மையங்கள் அமைப்பு ; விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல்
34 உழவர் நல சேவை மையங்கள் அமைப்பு ; விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல்
ADDED : ஜன 01, 2026 08:09 AM
நாமக்கல்: 'மாவட்டத்தில், 34 உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது' என, விவசா-யிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் துர்கா மூர்த்தி பேசினார்.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், விவசா-யிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்து பேசி-யதாவது: நாமக்கல் மாவட்டத்தின் இயல்பு மழை அளவு, 716.54 மி.மீ., தற்போது வரை, 728.03 மி.மீ., மழை பெறப்பட்டுள்ளது. டிச., முடிய இயல்பு மழையளவு, 716.54 மி.மீ., இயல்பு மழைய-ளவை விட, கூடுதலாக, 11.49 மி.மீ., அதிகமாக மழை பெறப்பட்டுள்ளது. நடப்பாண்டில், நவ., வரை, நெல், 8,201 ஹெக்டேர், சிறுதானியங்கள், 82,380 ஹெக்டேர், பயறு வகைகள், 11,336 ஹெக்டேர், எண்ணெய் வித்துக்கள், 30,796 ஹெக்டேர், பருத்தி, 1,800 ஹெக்டேர் மற்றும் கரும்பு, 9,051 ஹெக்டேர் என மொத்தம், ஒரு லட்-சத்து, 43,564 ஹெக்டேரில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
தோட்டக்கலை பயிர்களில், தக்காளி, 594 ஹெக்டேர், கத்திரி, 365 ஹெக்டேர், வெண்டை, 284 ஹெக்டேர், மிளகாய், 117 ஹெக்டேர், மர-வள்ளி, 2,918 ஹெக்டேர், வெங்காயம், 3,409 ஹெக்டேர், மஞ்சள், 2,264 ஹெக்டேர், வாழை, 2,471 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்-டுள்ளது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் விதைகள் மற்றும் உரங்கள் வேளாண்மை விரி-வாக்க மையங்கள், தொடக்க வேளாண் கூட்டு-றவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவ-ங்களில், விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப இருப்பு வைக்கப்பட்டுள்ளது. உழவர் நல சேவை மையங்கள் அமைக்க தமிழக முதல்வர் அர-சாணை வழங்கியுள்ளார். அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், 34 உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, 180-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை, விவசாயிகள் வழங்கினர். டி.ஆர்.ஓ., சரவணன், ஆர்.டி.ஓ., சாந்தி, கூட்டுறவு சங்கங்-களின் இணைப்பதிவாளர் அருளரசு, அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.பாராட்டுகடந்த, 16ல், சென்னையில் நடந்த விழாவில், வேளாண் துறை சார்பில், 2024--25ம் ஆண்டு, மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்-டியில், நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம், மல்லசமுத்திரம், எருமப்பட்டி, புதுச்சத்திரம், பள்-ளிபாளையம் ஆகிய வட்டாரங்களை சேர்ந்த, 7 விவசாயிகள் வெற்றி பெற்று, 11 லட்சம் ரூபாய் பரிசு தொகை பெற்றனர். அவர்களை, கலெக்டர் துர்காமூர்த்தி சால்வை அணிவித்து பாராட்-டினார்.

