/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு
/
முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு
ADDED : ஜன 01, 2026 08:08 AM
ப.வேலுார்: -கிருத்திகையை முன்னிட்டு, நேற்று ப.வேலுார் அருகே, நன்செய் இடையாறு ராஜா சுவாமி கோவிலில் உள்ள ராஜா சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மலர்களால் அலங்காரம் செய்யப்-பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பின், ராஜா சுவாமி தங்க கவச அலங்காரத்தில் பக்தர்
களுக்கு அருள்பாலித்தார். கலந்துகொண்ட பக்தர்-களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.இதேபோல், கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், கோப்பணம்பாளையம் பர-மேஸ்வரர், பரமத்தி அருகே உள்ள பிராந்த-கத்தில், 34.5 அடி உயரமுள்ள ஆறுமுகக்கடவுள், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்-தனுார் அருகே உள்ள பச்சமலை முருகன், அனிச்சம்பாளையத்தில் வேல்வடிவம் கொண்ட சுப்ரமணியர் உள்ளிட்ட கோவில்களில் முருக -பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.
* சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோவிலில், நேற்று காலை, 10:00 மணிக்கு, பால், தேன், தயிர் மற்றும் பல்வேறு வகையான வாசனை திரவி-யங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, விபூதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பா-லித்தார்.
* வெண்ணந்துார் குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோவிலில், சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபி-ஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்கா-ரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

