/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வீடு கட்டி தராததால் திருநங்கைகள் சாலை மறியல்
/
வீடு கட்டி தராததால் திருநங்கைகள் சாலை மறியல்
ADDED : ஜன 01, 2026 08:07 AM
ராசிபுரம்: -ராசிபுரம் அருகே, வீடு கட்டி தராததை கண்டித்து, திருநங்கைகள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்-டது.
ராசிபுரம் அருகே, கோப்பம்பட்டி பகுதியில், 6க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு சொந்த வீடு வேண்டும் எனக்கோரி, கடந்த சில மாதங்களுக்கு முன், 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தில் மனு அளித்தனர்.
அப்போது மாவட்ட கலெக்டராக இருந்த உமா, 'இப்பகுதியில் இடம் இருந்தால் திருநங்கைக-ளுக்கு வீடு கட்டித்தரலாம்' என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில், வீடு கட்டும் பணி தொடங்கிய நிலையில், கடந்த சில மாதங்களாக பாதியி-லேயே நிறுத்தப்பட்டது. இது குறித்து திருநங்-கைகள் பலமுறை அதிகாரிகளிடம் முறை-யிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த திருநங்கைகள், நேற்று வட்டார வளர்ச்சி அலுவலகம் முன், திடீரென தரையில் படுத்து சாலை மறியல் போராட்-டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 'இன்னும் ஓரிரு நாட்களில் வீடுகள் கட்டித்தர ஏற்பாடு செய்யப்படும்' என உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

